மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 40வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் 7 போட்டியில் ஆடி 5 வெற்றி (சென்னை, குஜராத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூருக்கு எதிராக), 2 தோல்வியுடன் (ராஜஸ்தான், லக்னோ அணிகளிடம்) 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதல் 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அடுத்த 5 போட்டியிலும் வென்று மிரட்டியது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா 220 ரன் எடுத்துள்ளார். ராகுல் திரிபாதி, மார்க்ராம் பார்மில் உள்ளனர் பந்து வீச்சில் டி.நடராஜன் 15 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். இன்று 4 விக்கெட் எடுத்தால் முதல் இடத்திற்கு முன்னேறலாம். மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், புவனேஷ்வர்குமாரும் மிரட்டுகின்றனர்.