ஜெ. மரண வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க வேண்டும்!: ஆறுமுகசாமி ஆணையத்தில் பெங்களூரு புகழேந்தி ஆஜர்..!!

சென்னை: ஜெயலலிதா மரண வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 156 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்தது. சசிகலா தரப்பு வழங்கறிஞர் மற்றும் அப்பல்லோ தரப்பு வழங்கறிஞர் அனைவரும் குறுக்கு விசாரணை, மறுவிசாரணை போன்ற அனைத்தையும் முடித்துவிட்ட சூழலில், ஆணையமும் விசாரணையை முடித்துள்ளது. இதனிடையே பெங்களூரு புகழேந்தி 200 பக்க மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். மேலும் அரசையும் பொறுப்பாக எடுத்துக்கொண்டு ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து, நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்கும்படி ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேரில் ஆஜராகியுள்ளார். எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிப்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இன்று முடிவெடுக்க உள்ளது.

Related Stories: