வேகமெடுக்கும் கொரோனா பரவல்!: பெய்ஜிங்கில் வசிக்கும் அனைவருக்கும் மெகா கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீன அரசு முடிவு..!!

பெய்ஜிங்: பெய்ஜிங்கில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நிலையில், தீவிர ஊரடங்கு விதிக்கப்பட்டு சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது சீனாவின் துறைமுக நகரான ஷாங்காயில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் பெய்ஜிங்கிலும் தினசரி கொரோனா பாதிப்பு 4உச்சம் தொட்டு வருகிறது.

இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இந்நிலையில் பெய்ஜிங்கில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெய்ஜிங்கில் வசிக்கும் 2.1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரை போல பெய்ஜிங்கிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து பெய்ஜிங்கில் கொரோனா பரிசோதனைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சளி மாதிரிகளை வழங்கி வருகின்றனர்.

Related Stories: