உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானிக்கு 5ம் இடம்: வாரன் பப்பெட்டை முந்தினார்

புதுடெல்லி: உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி, கவுதம் அதானி 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, அசுர வளர்ச்சி அடைந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-10 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், பல துறையில் வர்த்தகம் செய்து வரும் அதானி குழுமத்தின் நிறுவனங்களான அதானி மின் உற்பத்தி, அதானி துறைமுகம் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்த காரணத்தால், நேற்று உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த வாரன் பபெட்டை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளார்.

கவுதம் அதானி மொத்த சொத்து மதிப்புத் நேற்று காலை வர்த்தக நிலவரப்படி ரூ.9.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் 5வது இடத்தில் ரூ.9.25 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இருந்த வாரன் பபெட் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் ரூ.20.50 லட்சம் கோடி, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ரூ.12.93 லட்சம் கோடி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் ரூ.12.76 லட்சம் கோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ரூ.9.89 லட்சம் கோடி உடன் உள்ளனர்.

Related Stories: