இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஸ்பைக் ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்ப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிடம் இருந்து ஸ்பைக் அதிநவீன ஏவுகணைகளை வாங்குவதற்கு கடந்த ஆண்டு இந்தியா  ஒப்பந்தம் செய்தது. இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஸ்பைக் ஏவுகணைகள் ராணுவம் மற்றும்  விமான படையில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்பைக் எல்ஆர் -2 லாஞ்சர்கள்,ஏவுகணைகள் 5.5 வரை உள்ள தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. விமான படையின் எம்ஐ-17 வி 5 ஹெலிகாப்டர்களில் ஸ்பைக் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளன. இது 30 கிமீ துாரத்தில் உள்ள இலக்கையும் தாக்கும் திறன் உடையது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய  ராணுவத்தின் பல டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் உக்ரைனிடம்  உள்ள  ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் தான். இந்த ஆயுதத்தை கொண்டு  ரஷ்யாவை உக்ரைன் படை திணறடித்து வருகிறது. இதே போன்ற திறன் கொண்டவை ஸ்பைக் ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: