முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

போடி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் போடி முந்தல் சாலையில் பிரம்மாண்ட இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நேற்று நடந்தது. இதற்காக போடி முந்தல் சாலையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமை வகித்து கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். இதில், தேனி மாவட்ட கழக தேர்தல் பொறுப்பாளர், மாநில சட்டத்துறை இணை செயலாளர் ரவிச்சந்திரன், பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், போடி நகர்மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் திமுக முக்கிய பொறுப்பாளர்கள் மாவட்ட அளவிலான திமுகவினர் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த எல்கை பந்தயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பலவகையான அனைத்து மாடுகள் மாட்டு வண்டிகள் வீரர்கள் என பலரும் சிறப்பாக கலந்து கொண்டனர். பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் முதல் 25 ஆயிரம் வரை பரிசுகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. போடி டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: