திருவாரூர் வட்டாரத்தில் உரக்கடைகளில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு-கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை என எச்சரிக்கை

திருவாரூர் : திருவாரூர் வட்டாரத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவாரூர் மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உரங்கள் தட்டுப்பாடு இருந்து வரும்பட்சத்தில் யூரியா உரம் வேண்டுமானால் அதனுடன் சேர்த்து வேறு வகையான உரங்களையும் வாங்க வேண்டும் என தனியார் உரக்கடைகள் விவசாயிகளை நிர்ப்பந்திப்பதாக தொடர்ந்து விவசாயிகள் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

இதனையொட்டி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில் திருவாரூர் வட்டாரத்தில் இயங்கி வரும் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரங்கள் இருப்பு, விற்பனை விலை விவரம் போன்றவை குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தலைமையில் வேளாண் அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் திருவாரூர் புலிவலம், மாங்குடி, சோழங்கநல்லூர், பெருங்தரக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது உரங்களின், இருப்பு விலை விபரம், பதிவேடு போன்றவை குறித்து ஆய்வு செய்தனர். மேலும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்கும் தனியார் உரக்கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா தெரிவித்துள்ளார்.

Related Stories: