குன்றத்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்: விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு பங்கேற்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. சென்னைக்கு அடுத்த குன்றத்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரூ.2 கோடி மதிப்பில் குடமுழுக்கு விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. கோயில் கோபுரங்கள், கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசி திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 20ம் தேதி கணபதி ஓமம் கஜ பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

இன்று காலை ரத்தினகிரி, பாலமுருகன் அடிமை சாமிகள், சிவஞான பாலைய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கோயிலின் ராஜ கோபுரம் மற்றும் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு கருதி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: