தமிழகம் டெல்டா மாவட்ட கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் ஆய்வு Jun 11, 2021 முதலமைச்சர் டெல்டா மாவட்டம் கல்லறை கெ ஸ்டாலின் மேட்டூர் அணை ட்ரிச் முதலமைச்சர் திருச்சி மாவட்ட கல்லறை மேட்டூர் அணை நீர் டெல்டா மாவட்ட மயானம் முதல் அமைச்சர் கெ ஸ்டாலின் தின மலர் திருச்சி :திருச்சி மாவட்டம் கல்லணையில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். நாளை மேட்டூர் அணை நீர் பாசனத்திற்காக திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் சக்கரபாணி எம்.பி.பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். காா் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்த மு.க.ஸ்டாலின் அங்கு கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டுகிறார். இதை தொடர்ந்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். … The post டெல்டா மாவட்ட கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் ஆய்வு appeared first on Dinakaran.
101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு
ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்
சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்காக தலா 2 பொது பார்வையாளர்கள் நியமனம்: தொடர்புக்கான செல்போன் எண்களும் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நடிகர் கருணாஸ் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து
மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது தமிழ்நாட்டில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு: அரசியல் கட்சி அலுவலகம், பொது இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழ்நாட்டில் 7,689 மையங்களில் வரும் 9ம் தேதி குரூப் 4 தேர்வு 6,244 காலிப்பணியிடங்களுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எச்சரிக்கை
அரசுப்பணிகளில் சேருபவர்களின் சான்றிதழ் உண்மைத்தன்மையை சரிபார்க்க எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யூஜிசி உத்தரவு