சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற தெலங்கானா முதல்வர் ஐபேக்குடன் ஒப்பந்தம்

ஐதராபாத்: தெலங்கானாவில் தற்போது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கிறார். இந்த மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதை சந்திப்பதற்கு இப்போதே  காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இதனால், இத்தேர்தல் தனக்கு சுலபமாக இருக்காது என சந்திரசேகர ராவ் கருதுகிறார். ஏற்கனவே, அவர் பாஜ.வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அக்கட்சிக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், 3வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை செய்வதற்காக, இந்த தேர்தலில் அவர் பிரபல தேர்தல் வியூக அமைப்பான ‘ஐபேக்’குடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு முன்பாக இந்த அமைப்பின் தலைவராக இருந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், தற்போது அந்த பதவியில் இல்லை. இவர் காங்கிரசில் சேர இருப்பதாக சமீப காலமாக பலமாக பேச்சு அடிப்பட்டு வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றியை தேடி வருவதற்காக, இந்த கட்சியில் அவர் இணைக்கப்பட உள்ளார். இது தொடர்பாக, கடந்த சில வாரங்களாக இக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related Stories: