விவேகானந்த ரெட்டி கொலை பற்றி கருத்து தெரிவிக்க ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் இளைய சகோதரர் விவேகானந்த ரெட்டி கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்துலாவில் உள்ள அவரது வீட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தொடர்பு படுத்தி அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில், விவேகானந்தா ரெட்டி கொலை சம்பவம் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று, ஒய்.எஸ்.ஷர்மிளா உள்ளிட்டோருக்கு கடப்பா நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனையே ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. மேற்கண்ட விவகாரத்தில் ஒய்.எஸ்.ஷர்மிளா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கடப்பா நீதிமன்றம் ஷர்மிளாவுக்கு விதித்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்ட னர்.

The post விவேகானந்த ரெட்டி கொலை பற்றி கருத்து தெரிவிக்க ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: