ரூ.3 ஆயிரம் கோடி நாணய பரிமாற்றம் இலங்கை அரசுக்கு காலக்கெடு நீட்டிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி சலுகை

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதர சிக்கலை தடுக்க, இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. இந்நிலையில், இலங்கைக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கான நாணய பரிமாற்ற காலக்கெடுவை  இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இந்த நாணய பரிமாற்ற காலக்கெடு இந்த ஆண்டு ஜனவரியுடன் முடிந்தது. கடந்த 2019ம் ஆண்டு இந்தியா -இலங்கை இடையே   சார்க் நாணய பரிமாற்ற ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.3 ஆயிரம் கோடி வரை அமெரிக்க டாலர், ஈரோ அல்லது இந்திய ரூபாயில் பணம் எடுத்து கொள்ள இலங்கைக்கு  சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: