மும்பைக்கு எதிராக கடைசி ஓவரில் சென்னை திரில் வெற்றி; சாதனை மேல் சாதனை குவிக்கும் தல தோனி

மும்பை: நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்  கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் பிரிட்டோரியஸ் உனட்கட் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார். இரண்டாவது பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க 3-வது பந்தை எதிர்கொண்ட டோனி சிக்சர் அடித்தார். 4-வது பந்தில் பவுண்டரியை விரட்டினார் தோனி. 5-வது பந்தில் தோனி 2 ரன்கள் எடுக்க இறுதி பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் பவுண்டரி விரட்டிய தோனி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இதன் மூலம் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல் 2016 இல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் போது ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற கடைசி 4 பந்தில் 16 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது சொந்த சாதனையை தோனி சமன் செய்தார். ஐபிஎல் 2022ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் ஜோடியான ராகுல் திவேத்தியா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் ஐபிஎல் சாதனை படைத்துள்ளனர் - கடைசி 4 பந்துகளில் 17 ரன்கள்.

ஐபிஎல் 2012 இல் புனே வாரியர்ஸுக்கு எதிராக ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் சவுரப் திவாரியும் 4 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தனர். மேலும் தோனி 20ஆவது ஓவர்களில் மட்டும் இதுவரை 121 பந்துகளை எதிர்கொண்டு 323 ரன்களை விளாசியுள்ளார். இதில் 26 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடங்கும். இதில் ஸ்ட்ரைக் ரேட் 266.94 ஆகும். இப்படி ஒரு சாதனையை அதிரடி பேட்ஸ்மேன்களான டிவில்லியர்ஸ், கெயில் கூட படைத்தது இல்லை.

Related Stories: