போலார்டு ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கெய்ரன் போலார்டு (34 வயது), சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகமான போலார்டு, இது வரை 123 ஒருநாள் போட்டியில் 2,706 ரன் (அதிகம் 119, சராசரி 26.01, சதம் 3, அரை சதம் 13) மற்றும் 55 விக்கெட் எடுத்துள்ளார். தேசிய அணிக்காக 101 டி20 போட்டிகளில் களமிறங்கி உள்ள அவர் 1569 ரன் (அதிகம் 75*, சராசரி 25.30, அரை சதம் 6) மற்றும் 42 விக்கெட் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றாலும், ஐபிஎல் உள்பட பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்ளூர் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக போலார்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: