பாளை துணை மின்நிலையத்தில் புதிய பவர் டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டிற்கு வந்தது

நெல்லை : தினகரன் செய்தி எதிரொலியாக பாளையில் புதிய பவர் டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் கூடுதல் மின்பளு மற்றும் மின்தடை தவிர்க்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பாளையங்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்த பவர் டிரான்ஸ்பார்மர் கடந்த அக்டோபர் மாதம் பழுதடைந்தது. இதற்கு பதில் புதிய பவர் டிரான்ஸ்பார்மர் அமைக்க கேட்டு மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் மற்றொரு பவர் டிரான்ஸ்பார்மரும் பழுதானது. இதன் காரணமாக கூடுதல் மின்பளு ஏற்பட்டு நெல்லையில் பல இடங்களில் அவ்வப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 8ம் தேதி விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பாளை துணை மின்நிலையத்திற்கு பவர் டிரான்ஸ்பார்மர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய பவர் டிரான்ஸ்பார்மர் நிறுவும் பணிகள் நிறைவு பெற்று நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நெல்லை மாவட்ட மேற்பார்வை மின்பொறியாளர் ராஜன்ராஜ், பவர் டிரான்ஸ்பார்மர் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

செயற்பொறியாளர்கள் நெல்லை நகர்ப்புறம் முத்துக்குட்டி, ஆனந்த், தேவ மனோகரி, உதவி செயற்பொறியாளர்கள் பாளை. எட்வர்ட் பொன்னுசாமி, ஆண்டனி பிரின்ஸ்,  காமராஜ், உதவி மின் பொறியாளர் தெரச பாக்கியவதி, மாணிக்கராஜ், பாலகிருஷ்ணன், செல்வம், சங்கரநாராயணன், கருங்காட்டான், அழகுசெல்வி, சிறப்பு பராமரிப்பு பிரிவு, தாழையூத்து பொது நிர்மான வட்டப்பிரிவு, நெல்லை களப்பணியாளர்கள், உபமின் நிலைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: