மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 30வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் 5போட்டியில் 3 வெற்றி (ஐதராபாத், மும்பை, லக்னோ), 2 தோல்வி (ஆர்சிபி, குஜராத்) கண்டுள்ளது. கடைசி போட்டியில் குஜராத்திடம் வீழ்ந்த நிலையில் இன்று வெற்றி பாதைக்கு திரும்ப போராடும். பேட்டிங்கில் பட்லர் 272 ரன் குவித்து டாப்பில் உள்ளார். கேப்டன் சாம்சன், படிக்கல், டூசென் ரன் எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். பந்துவீச்சில் சாஹல் 12 விக்கெட் வீழ்த்தி உள்ளார். காயத்தில் இருந்து மீண்ட போல்ட் இன்று களம் இறங்கலாம்.