வடகொரியா நவீன ஏவுகணை சோதனை

சியோல்: அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் நவீன ஏவுகணை சோதனையை வட கொரியா மேற்கொண்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வட கொரியா மோதல் போக்கை கொண்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து இதுவரை, வடகொரியா 13 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளையும் தாக்கும் திறன் படைத்த, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது. வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலம் பெறும் முயற்சியும் உலக நாடுகளின் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில், அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கக் கூடிய நவீன ஏவுகணை சோதனையை  வடகொரியா நேற்று நடத்தியது. இதை இந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார். வட கொரியா விரைவில் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் என்பதையே இந்த அறிவிப்பு குறிப்பதாக அமெரிக்கா, தென் கொரியா நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

Related Stories: