சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  அவருடன் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதையை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி இந்த வருடம் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய முழு உருவ சிலைக்கு மரியாதையை செலுத்த கூடிய நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதையை செலுத்தும் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் பொது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும், தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், விருக்கம் பக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிராபகர் ராஜா, மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் கவுன்சிலர்கள் என ஏராளமான நிர்வாகிகள் இதில் பங்ற்றுள்ளனர்.

இவ்வாறாக சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய தீரன் சின்னமலை அருகே ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாள் நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக தொடந்து அனுசரிக்கப்பட்டது வருகிறது. இன்றைய திண்ணம் முதலமைச்சரை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அவருடைய சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் மரியாதையை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: