3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் நிறைவு விழா!: பிசிசிஐ முடிவு

மும்பை: கொரோனா கெடுபிடிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் நிறைவு விழாவை  வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக அகமதாபாத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.கொரோனா பீதி காரணமாக  கடந்த 2020, 2021 சீசன் ஐபிஎல் தொடக்க விழா, நிறைவு விழா   கொண்டாட்டங்கள் ஏதுமின்றி எளிமையாக முடிந்தன. 2019ல் புல்வாமா தீவிரவாத தாக்குதல் காரணமாக கொண்டாட்டங்கள் ரத்தானதுடன், விழாவுக்கான தொகை புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் குடும்ப நிதியாக வழங்கப்பட்டது.

கொரோனா  தொற்று குறைந்ததால்  நடப்பு தொடரில் ஆட்டங்களைக் காண  ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  ஆனால், தொடக்க விழா நடக்கவில்லை. இந்நிலையில் கொரானா கெடுபிடிகள் முழுமையாக ரத்து  செய்யப்பட்டுள்ளதால்  ரசிகர்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தில் இருந்து 50  சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் மே 29ம் தேதி நிறைவு  விழாவை பல்வேலை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாட பிசிசிஐ முடிவு  செய்துள்ளது. அது குறித்து  ஐபிஎல் நிர்வாகிகளுடன் ஆலோசனையும்  செய்துள்ளது. பிளே ஆப் சுற்று மற்றும் பைனல்  அகமதாபாத்தில் உள்ள மோடி அரங்கில் நடத்தப்படும். மே இறுதியில் கொரோனா பரவலின் நிலைமையை பொறுத்து முடிவு செய்யப்படும்.

Related Stories: