வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனு்க்கு தற்போது 79 வயது. முதுமையின் தள்ளாட்டம் சில நேரங்களில் அவரை காட்டிக் கொடுத்து விடும். இந்நிலையில், அவர் குழப்பத்தில் காற்றுடன் கைகுலுக்கிய சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. வடக்கு கரோலினா மாகாணத்துக்கு சென்ற பைடன், அங்குள்ள கல்லூரி ஒன்றின் விழாவில் கலந்து கொண்டு 40 நிமிடங்கள் நின்றபடியே உரையாற்றினார். தனது உரையை முடித்து திரும்பிய அவர், தனக்கு பின்னால் அதிகாரிகள் நிற்கிறார்கள் என்ற நினைப்பில் அவர்களுடன் கைகுலுக்க கையை நீட்டினார்.