தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, செரியன் நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கவியரசன். இவரது 17 வயது மகன், புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இச்சிறுவன், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளான். இந்நிலையில், நள்ளிரவில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
