தஞ்சை பெருவுடையார் கோயில் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை: உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயில் தேரோட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரம்மாண்ட தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். தஞ்சையில் மாமன்னர் ராஜராஜசோழனால் வானுயர கட்டப்பட்ட பெருவுடையார் ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாக போற்றப்படுகிறது.

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த பெருவுடையார் கோயில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வெகுசிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் முக்கிய விழாவான தேரோட்டம் காலையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் கலைநயத்துடன் கூடிய தேரில் தியாகராஜர் சுவாமிகள் கமலாம்பாளுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தஞ்சையின் மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி மற்றும் தெற்கு வீதி ஆகிய 4 வீதிகளிலும் தேங்காய், பழங்களை வைத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 4 வீதிகளையும் சுற்றியுள்ள 14 கோயில்களின் வாயில்களிலும் தேர் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.    

Related Stories: