‘ரிடயர்டு அவுட்’ அஷ்வினுக்கு பாராட்டு

லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நெருக்கடியான கட்டத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் வீரர் ஆர்.அஷ்வின், ஹெட்மயருடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தார். 23 பந்தில் 2 சிக்சருடன் 28 ரன் எடுத்திருந்த அவர் 18.2 ஓவர் முடிவில் ‘ரிடயர்டு அவுட்’ முறையில் பெவிலியன் திரும்பினார். அணியின் நலன் கருதி அஷ்வின் எடுத்த இந்த முடிவு அனைவரது பாராட்டையும் அள்ளி வருகிறது. ஐபிஎல் தொடரில் ‘ரிடயர்டு அவுட்’ ஆன முதல் வீரரும் அஷ்வின் தான். இது குறித்து, ராஜஸ்தான் அணி கிரிக்கெட் இயக்குனர் குமார் சங்கக்கரா கூறுகையில், ‘அஷ்வின் மிகச் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தார். ஸ்கோர் வேகத்தை அதிகரிக்கும் வியூகம் தான் இது. அவரது மதியூகம் மற்றும் தியாகத்தை பாராட்டுகிறேன். அணி நிர்வாகத்துக்கும் இதில் சரிபாதி பங்கு உள்ளது. அதே சமயம், வாண்டெர் டுசனை முன்கூட்டியே களமிறக்கியது எங்களின் தவறான முடிவாக அமைந்துவிட்டது’ என்றார். அந்த போட்டியில், அஷ்வின் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவரில் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆல் ரவுண்டராக ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: