வேலூர் சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடை திறந்ததை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம்: ஆண்கள் போட்டி போராட்டத்தால் பரபரப்பு

வேலூர்: சத்துவாச்சாரியில் டாஸ்மாக் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் பாலாற்றுக்கு செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் ஆண்களை பாலாற்று பகுதிக்கு விரட்டினர். அப்போது அவர்கள் டாஸ்மாக் இல்லை என்றால் இலவச திட்டங்களை அமல்படுத்த முடியாது. எனவே கடையை மூடக் கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டும்’’ என கோஷமிட்டனர். இதையடுத்து டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கியது.

Related Stories: