மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா திருக்கல்யாணத்தை காண 8 ஆயிரம் பேர் முன்பதிவு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்வை காண 8 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 7 மணியளவில் அம்மன், சுவாமி, தங்கச்சப்பரத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து, கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியை காலை 10 மணிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மன், சுவாமியை பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்தனர். நேற்றிரவு 7 மணியளவில் கைலாசபர்வதம், காமதேனு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதி உலா வந்தனர். வரும் 14ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்காக கடந்த 4ம் தேதி துவங்கி நேற்று வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று கடைசி நாள் என்ற நிலையில், ரூ.200 கட்டணத்திற்கான 2,500 சீட்டுகள்  உள்ளிட்ட 6 ஆயிரம் சீட்டுகளுக்கே அனுமதிப்பதாக கூறப்பட்ட நிலையில், பக்தர்கள் ஆர்வத்தோடு நேற்று வரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: