மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா, 2வது போட்டியில், லக்னோவிடம் தோல்வி அடைந்த புதுகேப்டன் ஜடேஜா தலைமையிலான சென்னை இன்று வெற்றி கணக்கை தெடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தீபக் சாஹர் இல்லாத நிலையில் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.