ஆஸ்கர் மேடையில் சக நடிகரை அறைந்ததற்கு பொறுப்பேற்று அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்..!!

லாஸ் ஏஞ்சிலஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சக நடிகரை அறைந்ததற்கு பொறுப்பேற்று ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சிலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் பேசிய நடிகர் கிறிஸ் ராக், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் உருவ தோற்றத்தை கேலி செய்தார். அலைபேசியா நோய் எதிரொலியாக தலைமுடியை இழந்த ஜடாவை தொடர்ந்து அவர் கிண்டல் செய்ததால் ஆந்திரமடைந்த நடிகர் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். விழா மேடையிலேயே வில் ஸ்மித், சக நடிகரை அறைந்தது ஹாலிவுட்டில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து தனது செயலுக்காக வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார்.

வில் ஸ்மித்-க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாக ஆஸ்கர் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் ராக்கை அறைந்ததற்கு முழு பொறுப்பேற்று ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக வில் ஸ்மித் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது செயல் அதிர்ச்சியையும், வேதனையும் அளிப்பதாகவும், மன்னிக்க முடியாதது என்றும் கூறியுள்ளார். ஆஸ்கர் விழா மேடையில் தனது செயலுக்கான அனைத்து விளைவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: