மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா - போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்.அரையிறுதியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் (28வது ரேங்க்) மோதிய ஒசாகா (77வது ரேங்க்) 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பென்சிக்கை முதல்முறையாக வீழ்த்தி பைபலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 6 நிமிடங்களுக்கு நீடித்தது. இதற்கு முன்பு ஒசாகாவுடன் மோதிய 3 முறையும் பென்சிக்தான் வென்று இருந்தார்.மற்றொரு அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் (21வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (2வது ரேங்க்) 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 48 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் பைனலில் ஒசாகா - ஸ்வியாடெக் மோதுகின்றனர். 2019 கனடா மாஸ்டர்ஸ் தொடரில் ஸ்வியாடெக்குடன் மோதிய ஒசாகா நேர் செட்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.