பூந்தமல்லி நகராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் பதவியேற்பு: அமைச்சர் நாசர், எம்எல்ஏ கிருஷ்ணசாமி வாழ்த்து

பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களை, அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகர்மன்ற உறுப்பினர்களாக திமுக சார்பில் 12 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும், சுயேச்சையாக 6 பேரும் வெற்றி பெற்றனர். இவர்கள், கடந்த 2ம் தேதி கவுன்சிலர்களாக பதவியேற்று கொண்டனர்.

இதற்கிடையே, நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் கடந்த 26ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் தலைவராக காஞ்சனா சுதாகர்,  துணை தலைவராக வேட்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். நகராட்சி அலுவலகத்தில் காஞ்சனா சுதாகர், ஸ்ரீதர் ஆகிய இருவரும் நேற்று பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு, அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், கவுன்சிலர்கள், நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, திமுக நிர்வாகிகள் சுதாகர், வின்பிரட், நெல்சன், ஏ.எஸ்.ஆர்.சுரேஷ், யுவராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: