வன்னியருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தில், \”வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு போதுமான வேலை, கல்வி போன்றவற்றில் உரிய வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். மேலும் வன்னியர் சமுதாய மக்கள் பிறருடன் போட்டி போட முடியாத நிலையில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை நியாயப்படுத்த எந்த விளக்கமும் கிடையாது. அவர்கள் படிப்பதற்கு கூடுதல் உதவிகளையோ அல்லது வசதிகளையோ செய்து தரலாம். ஆனால் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவித வழிவகையும் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு, \”வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கு அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது. இதில் போதிய தரவுகள் இல்லை என்பதற்காக அதனை நிராகரிக்கக் கூடாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது அந்த சமூகத்தின் வளர்ச்சியை பாதிப்படைய செய்யும். அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23ம்  ஒத்திவைத்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்று காலை நீதிபதிகள் எல்.நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

Related Stories: