சீனாவின் முதலீட்டை பெற புத்தர் சிலைக்கு பாதுகாப்பு: தலிபான்களை பணம் படுத்தும்பாடு

மெஸ் அய்னாக்: ஆப்கானிஸ்தானின் மெஸ் அய்னாக் பகுதியில் உள்ள தாமிர சுரங்கம் உலகின் மிகப் பெரிய தாமிர சுரங்கமாக கருதப்படுகிறது. இதில் இருந்து 1.2 கோடி டன் தாமிரம் எடுக்க சீன அரசுடன் கடந்த 2008ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த ஹமீத் கர்சாய் 30 ஆண்டு கால கூட்டு ஒப்பந்தம் செய்து இருந்தார். இந்த ஒப்பந்தம் தொடக்க பணியுடன் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆப்கானிஸ்தானில் கடந்த 2014ம் ஆண்டில் ஏற்பட்ட தொடர் வன்முறை காரணமாக சீன அதிகாரிகள், ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், உலக நாடுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகளினால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதில் இருந்து தப்புவதற்கு, சீனா உடனான இந்த ஒப்பந்தத்தை தலிபான் அரசு புதுப்பிக்க உள்ளது.

இதற்காக, கடந்த 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் வழங்குவதாக கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை சீனா மீண்டும் தொடங்கினால், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.76.29 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும்.

இது தவிர, மேலும் பல நேரடி, மறைமுக சீன முதலீடுகள் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும். இதன் மூலம் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை நிலை நிறுத்தி கொள்ள தலிபான் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. சீனாவின் இந்த முதலீட்டை பெறுவதற்கு அந்நாட்டின் நன்மதிப்பை பெறும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன் தனது முதல் ஆட்சி காலத்தில் அழிக்கப்பட்ட புத்தரின் ஆழ்நிலை தியான சிலைகள். முதலாம் நூற்றாண்டில் புத்த பிட்சுகளால் கட்டப்பட்டு சேதமடைந்த புத்த மடங்களுக்கு தலிபான் அரசு ராணுவ வீரர்களை நிறுத்தி பாதுகாப்பு அளித்து வருகிறது.

Related Stories: