கிறிஸ்ட்சர்ச்: 8 அணிகள் பங்கேற்ற 12வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. இதில் லீக் சுற்றுபோட்டிகள் நாளையுடன் முடிகிறது. பட்டியலில் முதல் 2 இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா அரையிறுதிக்கு தகுதி பெற்றது விட்டது. மற்ற 2 அணி எவை என்பது நாளை தெரிந்துவிடும். இந்தியா 6 போட்டியில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ளது. நாளை தென்ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் கட்டாய வெற்றி நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.