மழையால் கைவிடப்பட்ட ஆட்டம் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா

வெலிங்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை 23வது லீக் ஆட்டம் நேற்று வெலிங்டன்னில் நடந்தது. தெ.ஆப்ரிக்கா-வெ.இண்டீஸ் மகளிர் அணிகள் மோத இருந்த இந்த ஆட்டம் மழை காரணமாக பல மணி நேரம் தாமதமாக தொடங்கியது. கூடவே ஓவர்களின்   எண்ணிக்கை 26ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற  வெ.இண்டீஸ்  பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட தெ.ஆப்ரிக்கா 6ஓவருக்குள் 4 விக்கெட்களை இழந்து 25ரன் எடுத்தது. அடுத்து இணை சேர்ந்த மிக்னன்,  காப் இணை வேகம் காட்ட, மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால்  ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தெ.ஆப்ரிக்கா 10.5ஓவரில் 61ரன் எடுத்திருந்தது.

மிக்னன்38*, காப்5*  ரன்னுடன் களத்தில் இருந்தனர். வெ.இண்டீசின்  சினெல்லே 3, ஷமிலியா 1  விக்கெட் எடுத்திருந்தனர். மழை நிற்காததால் ஆட்டத்தை கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.  அதனால் தெ.ஆப்ரிக்கா  அணி 2வது அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த அணி 9 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.  தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய வெ.இண்டீஸ் 7 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது.

Related Stories: