உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தியிருக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நிபந்தனை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம், சுவை உள்ளதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும், பயோ-கழிவறை இருக்க வேண்டும். உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. உணவகத்தில் உணவு விலை பட்டியல் அவசியம், எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக விற்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும் என நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: