மூதாட்டி வீட்டின் முன் அநாகரிகமாக நடந்த விவகாரத்தில் ஏபிவிபி தலைவர் சுப்பையாவிற்கு ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஏபிவிபி தலைவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன் அநாகரிகமாக நடந்த விவகாரத்தில் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன் அநாகரிகமாக நடந்த விவகாரத்தில் ஏபிவிபி தலைவர் சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பயன்படுத்திய முக கவசத்தை வீசியும், சிறுநீர் கழித்தும் பக்கத்து வீட்டு பெண்மணிக்கு இடையூறு செய்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பையா மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் சுப்பையா சண்முகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் ஏற்கனவே வழங்கியது. இந்த நிலையில், ஏபிவிபி தலைவர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி வழக்கை தொடர விரும்பவில்லை என நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது.

Related Stories: