சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: மக்கள்தொடர்பு துறை சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சி  பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நிறைவு பூங்கா அருகில் 75வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இதில் எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், ஆகியோருடன் பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நேற்று முதல் தொடங்கப்பட்டு வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி, வேளாண் துறையால் பாரம்பரிய நெல் கண்காட்சி மற்றும் விவசாயிகளுக்கான அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மகளிர் சுய உதவி கூடம் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் (பொறுப்பு) திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் கணேசன் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், முன்னாள் நகரமன்ற தலைவர் சன் பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Related Stories: