திருப்பதியில் ஏப்.1 முதல் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

சித்தூர்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 1-ம் தேதி முதல் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் கடந்த 2020 மார்ச் 20-ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகள் மற்றும் அங்கபிரதட்சணம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம், அஷ்டலபாத ஆராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த ஒரு பகுதியாக ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களுக்காக தரிசன டிக்கெட், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கடந்த 20-ம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அங்கபிரதட்சணம் செய்து வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பி.ஏ.சி 1-ல் பக்தர்களுக்கு அங்கபிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கபட உள்ளனர். முந்தைய நாள் அங்கபிரதட்சணம் டிக்கெட் பெரும் பக்தர்கள், மறுநாள் அதிகாலை கோவிலில் அங்கபிரதட்சணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.       

Related Stories: