ஈஸ்டர்ன் ஏர்லைசின் போயிங் 737 வகை விமானம் தெற்கு சீனாவில் விபத்துக்குள்ளானது: 133 பேரின் கதி என்ன?

குவாங்ஸி: சீனா குவாங்ஸி மாகாணத்தில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனத்தில் போயிங் 737, 737 MAX என இரண்டு பிரிவுகளாக விமானங்கள் உள்ளன. இதில் 737 MAX வகை விமானங்கள் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய கண்டுபிடிப்பான போயிங் 737 விமானத்தில் பெரிய அளவில் கோளாறுகள் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க் ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

8,400அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டு இருந்தது. 183 அடி உயர்த்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. மலைப்பகுதியில் விமானம் விழுந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: