பிஎன்பி பாரிபா ஓபன் பைனலில் நடால்

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். அரையிறுதியில் சக வீரர் கார்லோஸ் அல்கராஸுடன் (18 வயது, 19வது ரேங்க்) மோதிய நடால் (35 வயது, 4வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்ப்ற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த அல்கராஸ் 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரரை திணறடித்த நடால் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் (24 வயது, 20வது ரேங்க்) 7-5, 6-4 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவை (24 வயது, 7வது ரேங்க்) 1 மணி, 50 நிமிடத்தில் வீழ்த்தினார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனலில் நடால் - பிரிட்ஸ் மோதுகின்றனர். இந்த போட்டியில் நடால் வெற்றி பெற்றால், ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடரில் 37வது சாம்பியன் பட்டத்துடன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: