ஹிஜாப் உடை விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு தேமுதிக உறுதுணையாக இருக்கும்: தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தேமுதிக அனைத்து மாவட்ட மகளிர் அணியினரின் ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இதில் அனைத்து மாவட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். கூட்டத்தில் செயின் பறிப்பு, கொள்ளை, கொலை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை அதிகமாக பயன்படுத்தி குற்றங்களை கண்டுபிடிக்கவும், தடுத்திடவும் பெரும்பான்மையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை  அமைத்திட வேண்டும். நீட் தேர்வில் ஒரு நல்ல முடிவை எடுத்து மாணவ-மாணவிகளை குழப்பத்திலிருந்து காப்பாற்றி தமிழக அரசு உதவிட வேண்டும்.

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் பல இன்னல்களுக்கு இடையில் தாயகம் திரும்புகின்ற நிலையில், அவர்கள் தங்கள் படிப்பை தொடர தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டும். ஹிஜாப் உடை அணியலாமா, வேண்டாமா என்ற ஒரு கருத்து சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தேமுதிகவை பொறுத்தவரைக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், அவர்கள் மத உணர்வையும், மன உணர்வையும் போற்றக்கூடியவர்களாக அவர்களுக்கு என்றைக்கும் பக்கப்பலமாக இருப்போம் என்பது  உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: