வேளாண் பட்ஜெட்டை நாடே பாராட்டுகிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா, தாம்பரம் மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேற்கு தாம்பரம் - திருநீர்மலை சாலையில் கடப்பேரி பகுதியில் நேற்று நடைபெற்றது. இதற்கு தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமை தாங்கினார். இந்த விழாவில் டி.ஆர்.பாலு எம்.பி.,  அமைச்சர்  தா.மோ.அன்பரசன், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பின்னர், டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதாவது:  நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மார்ச் 31க்குள் உங்கள் நகை உங்கள் வீடு தேடி வரும். பயிர் கடனுக்கு ₹2537 கோடி தரப்பட்டுள்ளது, சென்னை வெள்ளத்திற்கு ₹500 கோடியும், கோயில்களுக்கு ₹100 கோடியும்  ஒதுக்கப்பட்டுள்ளது, தாம்பரம் மாநகராட்சிக்கு ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்படி பெரிய அளவில் நிதி நிலை அறிக்கை தயார் செய்து மிக உயர்ந்த மனிதனாக இருக்கிறார்நமது முதல்வர்.  இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சிக்காரர்களுக்கு ஆபத்து என்றாலும் விடமாட்டார். அதேநேரத்தில் கட்சிக்காரன் தவறு செய்தாலும் விடமாட்டார். வேளாண்மைக்காக  தனி பட்ஜெட் போட்டார்கள். அதை நாடே பாராட்டுகின்ற அளவிற்க்கு  நமது தலைவர் திகழ்கிறார்,

விவசாயிகள்  எல்லாம் பாராட்டுகிறார்கள். பல்வேறு சாதனைகள், பல்வேறு திட்டங்களை  அறிவித்து விவசாயிகள் பாராட்டக்கூடிய அளவிற்கு, விவசாயிகள் தலைநிமிர கூடிய அளவிற்கு பட்ஜெட் போட்டு இருக்கும் ஒரே தலைவர்  நமது தலைவர்தான் என்று விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.’’ என்றார். இந்நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன்,  துணைமேயர் கோ.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் டி.காமராஜ், ஜோதிகுமார், ரமணி  ஆதிமூலம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: