இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: வெஸ்ட்இண்டீஸ் 411 ரன்னில் ஆல்அவுட்

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் இடையே 2வது டெஸ்ட் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 507 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஜோ ரூட் 153, பென் ஸ்டோக்ஸ் 120 ரன் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 187.5 ஓவரில் 411 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

கேப்டன் பிராத்வெயிட் 160 ரன் அடித்தார். இங்கிலாந்து பந்துவீச்சில், ஜாக் லீச் 3, பென்ஸ்டோக்ஸ், சாகிப் மஹ்மூத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 96 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்திருந்தது. இன்று கடைசிநாள் ஆட்டம் நடக்கிறது. முதல் போட்டி போல் இந்த டெஸ்ட்டும் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.

Related Stories: