மேடவாக்கம் கூட்ரோடு பகுதியில் வாலிபர் அடித்து கொலை: போலீசார் விசாரணை

வேளச்சேரி: மேடவாக்கம் கூட்ரோடு  அருகே, நேற்று காலை 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள், பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தது மேடவாக்கம், சாய்ராம் நகரை சேர்ந்த நந்தகுமார் (19) என்பதும், பொக்லைன் டிரைவரான இவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இவர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி  காரணமா, கள்ளக்காதல் விவகாரமா அல்லது மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமா  என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: