மூதாட்டி வீட்டு வாசலில் ‘அசிங்கம்’ செய்த விவகாரம் முன்னாள் ஏபிவிபி தலைவர் டாக்டர் சுப்பையா கைது

சென்னை: மூதாட்டி வீட்டு வாசலில் ‘அசிங்கமாக’ நடந்த விவகாரத்தில் முன்னாள் ஏபிவிபி தலைவர் டாக்டர் சுப்பையாவை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர்  டாக்டர் சுப்பையா சண்முகம். இவர் 2017 முதல் 2020 வரை பாஜமாணவர் அமைப்பான ஏபிவிபி.யில் தேசிய தலைவராக இருந்தவர். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் டாக்டராக  பணியாற்றினார்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 2020ல் சுப்பையா சண்முகம்  வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மூதாட்டிக்கு சொந்தமான இடத்தில் காரை நிறுத்தும் தகராறில் மூதாட்டிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.

தட்டிக்கேட்ட மூதாட்டி மீது கோபத்தில் இருந்த சுப்பையா, அவரது வீட்டின் முன் இரவில் குப்பையை வீசுவது, சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து  மூதாட்டி, சுப்பையாவின் செயல்களை  சிசிடிவி காட்சி மூலம் அவரிடம் காட்டிய போது,  அது நான் அல்ல என்று நிராகரித்து வந்தார்.

இதையடுத்து,  மூதாட்டி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் சென்று புகார் அளித்தார். சுப்பையா மீது  பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  விசாரணையில் இருந்த நிலையில், நேற்று டாக்டர் சுப்பையா சண்முகத்தை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 15 ந்தேதி முதல்வர் வீட்டின் முன் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்கள்கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதா னவர்களை சிறையில் அவர்களை சந்தித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை புற்றுநோய் பிரிவு தலைவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: