தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி, வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு.: மக்களவையில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

டெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் கூறியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.

பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இது, வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி,மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதனையடுத்து, கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டது. தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டினார். அதே சமயம், One Nation என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

Related Stories: