வெப்சீரிஸில் நாகசைதன்யா, பார்வதி

சென்னை: விக்ரம் குமார் இயக்கும் வெப்சீரிஸில் நாகசைதன்யா, பார்வதி, பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். தமிழில் அலை, யாவரும் நலம், 24, தெலுங்கில் இஷ்க், மனம், ஹலோ, கேங்லீடர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் அடுத்ததாக ஓடிடி தளத்துக்காக வெப்சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. தூதா என இதற்கு தலைப்பிட்டுள்ளனர். ஹாரர் ஜானரில் உருவாகும் இந்த வெப்தொடரில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, மலையாள நடிகை பார்வதி, தமிழ் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

Related Stories: