மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: 32 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய தென்ஆப்ரிக்கா

டுனெடின்: 8 அணிகள் பங்கேற்றுள்ள 12வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும். நேற்று நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்தை 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது. இன்று நடந்த 2வது லீக் போட்டியில்  தென்ஆப்ரிக்கா-வங்கதேசம் மோதின.

டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைதேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 49.5 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம்இறங்கிய வங்கதேசம் 49.3 ஓவரில் 175 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 32 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதேபோல் ஹாமில்டனில் நடந்த 3வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 310 ரன் குவித்தது. ரேச்சல் ஹெய்ன்ஸ் 130 (131 பந்து), கேப்டன் மெக் லானிங் 86 ரன் எடுத்தனர். பின்னர் 311 ரன் இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

Related Stories: