வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெற்றது... வட தமிழக கடற்கரையை நோக்கி நகர்கிறது!!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இலங்கைக்கு தென் கிழக்கே வங்கக்கடலில் உருவாக்கி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கையில் திரிகோணம் மலைக்க தென் கிழக்கே 760 கீ.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாட்டின் கடலோரம் நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் வரும் 5ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உட்பட வட தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மணிக்கு 50-70 கிமீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்திய பெருங்கடல் மற்றும் தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: