பிக்னிக் ஸ்பாட்டாக மாறியது நம்ம நாகர்கோவில் மேடை திடீர் மூடல் ஏன்?அதிகாரிகள் விளக்கம்

நாகர்கோவில்:நாகர்கோவில் வடசேரியில் நம்ம நாகர்கோவில் மேடை திடீரென மூடப்பட்டது மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இந்தியா முழுவதும் நகரங்களை பெருமைகளை கூறும் வகையிலும், மக்களை கவரும் வகையில், அந்த நகரங்களின் பெயருடன் நம்ம என்ற வார்த்தை அல்லது ஏதாவது ஒரு கவர்ச்சிகரமான சுரோகன் இணைத்து, பூங்கா போன்ற அலங்கராத்துடன், அமைத்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியிலும், ஆணையர் ஆஷா அஜித் ஏற்பாட்டில் தன்னார்வலர் மூலம், வடசேரி கனகமூலம் சந்தை முன்பு “நம்ம நாகர்கோவில்” என்ற ராட்சத எழுத்துக்கள், மற்றும் பிளாஸ்டிக் புற்கள் மேடை மீது அமைக்கப்பட்டது.

இந்த எழுத்து மேடை முன்பு அதிகாலை முதல் நள்ளிரவு வரை, குழந்தைகள் பெற்றோர்களுடனும், கல்லூரி மாணவ, மாணவிகள் என கடந்த இரு நாட்களாக திரண்டு வந்து செல்பி எடுத்து வந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில், வைரலாகி வருகிறது. இந்நிலையில் நேற்று நம்ம நாகர்கோவில், தார்பாலின் மூலம் மூடப்பட்டது. இதனால், வெளியூர்களில் இருந்து, இதனை பார்த்து செல்பி எடுக்க வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னை, திருநெல்வேலியை தொடர்ந்து, தனியார் பங்களிப்புடன் இந்த பெயர் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேடையில் இரவிலும் கண்ணை கவரும் வகையில் வண்ண விளக்குகள் பொருத்துதல் உள்பட மேலும் சில அழகு படுத்தும் வேலைகள்  பாக்கி உள்ளன. இன்னும் இரு நாட்களில்  இந்த பணிகள் நிறைவு பெற்று வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படும் என்றனர்.

Related Stories: