அஸ்ரத்சயது ஹமீது அவுலியா தர்கா சார்பில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு வரவேற்பு: மாசி பிரம்மோற்சவ விழா நிறைவு

காஞ்சிபுரம்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன், லட்சுமி சரஸ்வதியுடன் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதன் நிறைவு விழாவில் தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடத்தப்படும்.

கடந்த 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த பூப்பல்லக்கு நிகழ்ச்சி, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின் கோரிக்கையின் பேரில், தேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவர் ஜான்பாண்டியன், கடந்த ஆண்டு முதல் தொடங்கி வைத்தார்.

இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த 15 நாட்களுக்கு முன் தொடங்கி, நேற்று முன்தினம் பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, லட்சுமி சரஸ்வதியுடன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் ராஜ வீதிகளில் வலம் வந்தார்.

இந்நிலையில், காஞ்சி சங்கர மடம் அருகில் உள்ள அஸ்ரத்சயது ஹமீது அவுலியா தர்கா அமைந்துள்ளது. இதை சார்ந்த நிர்வாகிகள், கடந்த காலங்களில் நிகழ்ந்த மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்தாண்டு தர்காவில் இருந்து ரோஜா பூக்கள் மற்றும் பன்னீருடன் காமாட்சி அம்மனை வரவேற்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.

இதேபோல், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ரத உற்சவத்தின்போது, அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாளுக்கு, படையிலடும் நிவைவேந்தியம் முதல் மரியாதையாக இதற்கான நிர்வாகிகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: